In Loving Memory of Pastor J. J. Selwyn Wilson
இனிய அன்பின் நினைவாக In Loving Memory of
Pastor J. J. Selwyn Wilson

போதகர் ஜே. ஜே. செல்வின் வில்சன்

Pastor J. J. Selwyn Wilson

1945 – 2025
27 நவம்பர் 1945 — 24 பிப்ரவரி 2025
27 November 1945 — 24 February 2025
அத்தியாயம் ௧

அர்ப்பணிப்பில் ஆரம்பமான வாழ்க்கை

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில் பிறந்தார். கடினமான பிரசவ நேரத்தில் தாயார் செய்த அர்ப்பணிப்பு ஜெபம் அவரது வாழ்வில் நனவானது. சிறுவயதிலேயே ஜெபம், வேத வாசிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றில் வளர்க்கப்பட்டார். இலங்கையில் கல்வி கற்ற காலத்திலேயே தேவ பயமும் தமிழ்மொழி மீது பற்றும் வளர்ந்தது.

Chapter 1

A Life Begun in Dedication

Born in Meignanapuram, Thoothukudi District, Pastor J. J. Selwyn Wilson’s life was marked by divine purpose from the very beginning. During a difficult childbirth, his mother dedicated him to the Lord in fervent prayer — a prayer that became the foundation of his life’s calling. From childhood, he was nurtured in prayer, Scripture reading, and disciplined Christian living. During his years of education in Sri Lanka, he developed a deep reverence for God and a strong love for the Tamil language, both of which would later shape his ministry.

அத்தியாயம் ௨

சோதனைகளில் உருவான அழைப்பு

வாழ்க்கைச் சிரமங்கள் அவரை கர்த்தரிடத்தில் மேலும் நெருக்கமாக்கின. இலங்கையில் ஆவிக்குரிய பயிற்சி பெற்று உறுதியான விசுவாசத்தில் வளர்ந்தார். 1983 கலவரத்திற்குப் பின் இந்தியா திரும்பி, ஜெப வாழ்வில் ஆழ்ந்து முழுநேர ஊழிய அழைப்பைப் பெற்றார்.

1987ல் “நித்தியபேரின்பம்” பத்திரிகையைத் தொடங்கி, அதன் மூலம் திருமணத் தகவல் ஊழியம் உருவாகி அநேக குடும்பங்கள் இணைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டன.

Chapter 2

A Calling Forged Through Trials

Life’s hardships drew him closer to the Lord. While in Sri Lanka, he received spiritual training and grew in steadfast faith. Following the ethnic riots of 1983, he returned to India. Immersing himself in a life of prayer, he received a clear call to full-time ministry.

In 1987, he founded the magazine Nithia Perinbam (“Eternal Bliss”). Through this publication, a matrimonial ministry was formed, leading to the union and blessing of many families.

அத்தியாயம் ௩

சபை நிறுவலும் விசுவாசமுள்ள ஊழிய ஆண்டுகளும்

1995 ஏப்ரல் 30 அன்று என்.ஜி.ஓ காலனியில் சீயோன் ஏ.ஜி. சபையை ஆரம்பித்தார். சிறிய தொடக்கம் தேவ கிருபையால் வளர்ச்சி பெற்று உறுதியான சபையாக நிலைபெற்றது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேய்ப்பராகவும், தலைவராகவும், ஆவிக்குரிய வழிகாட்டியாகவும் பணியாற்றி அநேகரை விசுவாசத்தில் வளர்த்தார். அவரது தலைமையேற்பு சபையில் ஒற்றுமையையும், நல்ஐக்கியத்தையும் மற்றும் வலுவான ஆவிக்குரிய அடித்தளத்தையும் ஏற்படுத்தியது.

Chapter 3

Church Planting and Faithful Years of Ministry

On April 30, 1995, he established Zion A.G. Church in NGO Colony. What began as a humble gathering flourished by God’s grace into a strong and vibrant congregation. For over three decades, he faithfully served as pastor, leader, and spiritual mentor, nurturing countless believers in their faith. His leadership fostered unity, healthy fellowship, and a firm spiritual foundation within the church.

அத்தியாயம் ௪

கிறிஸ்துவைப் போன்ற பண்புகள்

அவர் என்றும் நினைவுகூரப்படுவது:

  • ஆவியினால் நிரம்பிய தலைமைத்துவம்
  • தாழ்மையுடன் முன்மாதிரியாக இருந்த ஊழியம்
  • இரக்கம் மற்றும் அன்பு நிறைந்த இதயம்
  • ஜெபம், போதனை, மேய்ப்புப் பணிகளில் உறுதியான அர்ப்பணிப்பு

“பதவியல்ல, பரமனின் அழைப்பே மேலானது”

Chapter 4

Christlike Character

He will always be remembered for:

  • Spirit-filled leadership
  • Humble, exemplary ministry
  • A compassionate and loving heart
  • Steadfast dedication to prayer, preaching, and pastoral care

“Not position, but the Lord’s calling, is supreme.”

அத்தியாயம் ௫

தாராள மனமும் பாகுபாடில்லா அன்பும்

பணத்தை விட மனிதர்களை உயர்வாக மதித்தார். எந்த ஊழியர் வந்தாலும் தாராளமாக காணிக்கை கொடுத்து கனப்படுத்துவார். தசமபாகம் மற்றும் காணிக்கையில் சபைக்கு முன்மாதிரியாக இருந்தார். அந்தஸ்து, பதவி என பாராமல் அனைவரையும் சமமாக நேசித்தார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, தந்தைபோன்ற அன்புடன் ஆசீர்வதித்தார். அவரது எளிமையும் அணுகுவதற்கு எளிதான இயல்பும் அனைவரையும் மதிப்புமிக்கவர்களாக உணரச் செய்தது.

Chapter 5

A Generous Heart and Impartial Love

He valued people above possessions. He generously honored visiting ministers with offerings and set an example in tithing and giving. Regardless of status or position, he treated everyone with equal love and respect. He spent time with children, blessing them with fatherly affection. His simplicity and approachable nature made everyone feel valued and cherished.

அத்தியாயம் ௬

நிலைத்திருக்கும் பாரம்பரியம்

அவரது ஜெபங்கள், போதனைகள், அன்பான வழிகாட்டுதல் இன்றும் பலருக்கு ஆறுதலும் வலிமையும் அளிக்கின்றன. இறுதி வரை அயராது தேவபணியில் உழைத்தார்.

“ஊழியர்கள் மரிக்கலாம்; ஆனால் ஊழியங்கள் ஒருபோதும் மரிப்பதில்லை.”

Chapter 6

An Enduring Legacy

His prayers, teachings, and loving guidance continue to bring comfort and strength to many. He labored tirelessly in the Lord’s work until the very end.

“Ministers may pass away, but ministries never die.”

நன்றியுடனான அஞ்சலி

ஆசிரியர் ஜே. ஜே. செல்வின் வில்சன் அவர்கள் — விசுவாசமுள்ள ஊழியக்காரர், தாழ்மையான தலைவர், அன்பான மேய்ப்பர். அவரது நினைவு என்றும் போற்றப்படும். அவரது பாரம்பரியம் சீயோன் நித்திய பேரின்பம் திருச்சபைக்கும் விரிந்த கிறிஸ்தவ சமூகத்திற்கும் நிலையான ஆசீர்வாதமாகத் தொடரும்.

விசுவாசமுள்ள ஊழியக்காரர் தாழ்மையான தலைவர் அன்பான மேய்ப்பர்
“ஊழியர்கள் மரிக்கலாம்; ஆனால் ஊழியங்கள் ஒருபோதும் மரிப்பதில்லை.”
A Grateful Tribute

Pastor J. J. Selwyn Wilson was a faithful servant, a humble leader, and a loving shepherd. His memory will forever be honored. His legacy will continue as a lasting blessing to Zion Nithia Perinbam Church and to the wider Christian community.

Faithful Servant Humble Leader Loving Shepherd
“Ministers may pass away, but ministries never die.”
Zion Nithia Perinbam Church, NGO Colony © 2025 — சீயோன் நித்திய பேரின்பம் திருச்சபை © 2025 — Zion Nithia Perinbam Church